Aptitute - கூட்டுவட்டி !!
திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை
கூட்டுவட்டி !!
Aptitute, Maths,
கேள்வி:1
15,000 ரூபாய் மீது 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டி மற்றும் தனிவட்டி தொகைகளுக்கு இடையேயான வேறுபாடு 96 ரூபாய் எனில், ஆண்டொன்றுக்கான வட்டி விகிதம் என்ன?
விடை: 8%
தீர்வு:
2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வேறுபாடு.
D = (p r²/ 100²)
96 = (15000 x r²) / (100 x 100)
64 = r²
r = 8
வட்டிவீதம் = 8%
கேள்வி:2
குறிப்பிட்ட தொகையின் மீது 2 ஆண்டு களுக்கு ஆண் டொன்றுக்கு 4 சதவிகித வட்டி விகிதத்தில் வருடாந்திர அடிப்படையில் கணக்கிடப்படும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயான வேறுபாடு 1 ரூபாய் எனில் அசல் தொகை எவ்வளவு?
விடை: ரூ.625
தீர்வு:
2 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வேறுபாடு.
D = (p r² / 100²)
1 = (p x 42)/ 100²
1 = (p x 4 x 4) / (100 x 100)
p = 25 x 25
p = 625
அசல் தொகை = ரூ.625