Aptitute - தள்ளுபடி..!!
திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை
பரப்பளவு ..!!
Aptitute, Maths,
திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை – பரப்பளவு..1
விற்கான கணித வினா விடைகள் !!
1. நீளம் 15மீ, அகலம் 10மீ உடைய செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு, சுற்றளவு காண்க.
விடை:- செவ்வகத்தின் பரப்பளவு = 150மீ2, செவ்வகத்தின் சுற்றளவு = 50மீ
தீர்வு:-
நீளம் = 15மீ, அகலம் = 10மீ
செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் X அகலம்
= 15மீ X 10மீ
= 150மீ2
செவ்வகத்தின் சுற்றளவு = 2 (நீளம் + அகலம்)
= 2 (15 + 10)
= 50மீ
2. 80மீ நீளம் உடைய செவ்வக வடிவத் தோட்டத்தின் பரப்பளவு 3200ச.மீ. தோட்டத்தின் அகலத்தைக் காண்க.
விடை:- தோட்டத்தின் அகலம் = 40மீ
தீர்வு:-
நீளம் = 80மீ
பரப்பளவு = 3200ச.மீ
செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் X அகலம்
அகலம் X (செவ்வகத்தின் பரப்பளவு / நீளம்)
= (3200)
= (3200 / 80)
= 40மீ
3. சதுர வடிவப் பூந்தோட்டத்தின் பக்கம் 50மீ, பூந்தோட்டத்தைச் சுற்றி மீட்டருக்கு ரூ.10 வீதம் வேலி போட ஆகும் செலவைக் காண்க.
விடை:- ரூ.2000
தீர்வு:-
சதுர வடிவப் பூந்தோட்டத்தின் பக்கம் 50மீ
(வேலி போட ஆகும் மொத்த செலவைக் காண தோட்டத்தின் சுற்றளவைக் கண்டு அதை மீட்டருக்கு ஆகும் செலவுடன் பெருக்கினால் போதுமானது)
சதுர வடிவ பூந்தோட்டத்தின் சுற்றளவு = 4 X பக்கம்
= 4 X 50
= 200மீ
வேலி போட ஒரு மீட்டருக்கு ஆகும் செலவு = ரூ.10
200 மீட்டருக்கு ஆகும் செலவு = ரூ.10 X 200
= ரூ.2000