Aptitute - தள்ளுபடி..!!
திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை
தள்ளுபடி..!!
Aptitute, Maths,
திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை – தள்ளுபடி
1. வியாபாரி ஒருவர் தனது பொருளில் 75% இலாபம் வைத்து விலை குறிக்கிறார் எனில் அவர் நஷ;டம் அடையாமலிருக்க வேண்டுமெனில் அதிகபட்சம் எவ்வளவு சதவீதம் தள்ளுபடி அளிக்கலாம்?
விடை: 42.85%
தீர்வு:
அடக்கவிலை ரூ.100 என்க.
ஃ குறித்த விலை = 100 + 75 = 175
தள்ளுபடி சதவீதம் = (தள்ளுபடி / குறித்த விலை) x 100
அதிகபட்ச தள்ளுபடி = (75 / 175) x 100 = 42.85%
(தள்ளுபடி எப்போதும் குறிக்கப்பட்ட விலை மீதே வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்க).
2. ஒரு பொருளின் அடக்கவிலை ரூ.300 தள்ளுபடி 8% எனில் விற்பனை விலை என்ன?
விடை: ரூ.276
தீர்வு:
தள்ளுபடி சதவீதம் = (தள்ளுபடி / குறித்தவிலை) x 100
தள்ளுபடி % = 300 x (8 / 100) = 24
விற்பனை விலை = அடக்கவிலை – தள்ளுபடி
300 – 24 = 276.
3. ஒரு சட்டை ரூ.840-க்கு விற்கப்பட்டது. அதன் குறிக்கப்பட்ட விலை ரூ.960 எனில் அளிக்கப்பட்ட தள்ளுபடி சதவீதம் என்ன?
விடை: 12.5%
தீர்வு:
தள்ளுபடி = குறிக்கப்பட்ட விலை – விற்பனை விலை
120 = 960 – 840
தள்ளுபடி சதவீதம் = (தள்ளுபடி / குறிக்கப்பட்ட விலை) x 100
தள்ளுபடி % = (120 / 960) x 100 = 12.5.