Aptitute - நிகழ்தகவு!!
திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை
நிகழ்தகவு!!
Aptitute, Maths,
திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை – நிகழ்தகவு!!
1. ஒரு பெட்டியில் 8 சிவப்பு நிற பந்துகள், 7 நீல நிற பந்துகள் மற்றும் 6 பச்சை நிற பந்துகள் உள்ளன. சோதனை முறையில் ஒரு பந்து எடுக்க அது சிவப்பு நிற பந்தாகவோ அல்லது பச்சை நிற பந்தாகவோ இல்லாமல் இருக்க நிகழ்தகவு என்ன?
விடை : (1/3)
விளக்கம் :
மொத்த பந்துகளின் எண்ணிக்கை
= (8 + 7 + 6) = 21
N(S) = 21
சிவப்பு மற்றும் பச்சை நிற பந்துகளின் எண்ணிக்கை
= (8 + 6) = 14
சிவப்பு மற்றும் பச்சை நிறமல்லாத பந்துகளின் எண்ணிக்கை
= (21 – 14) = 7
= N(E) = 7
சிவப்பு நிற பந்தாகவோ அல்லது பச்சை நிற பந்தாகவோ இல்லாமல் இருக்க நிகழ்தவு
P(E) = N(E)/N(S)
= (7/21) அல்லது (1/3)
2. ஒரு பரிசுச்சீட்டு குலுக்கலில் 10 பரிசுகள் உள்ள சீட்டுகளும், 25 வெற்றுச் சீட்டுகளும் உள்ளன. சோதனை முறையில் ஒரு சீட்டு எடுக்க அது பரிசு உள்ள சீட்டாக இருக்க நிகழ்தகவு என்ன?
விடை : (2/7)
விளக்கம் :
மொத்த சீட்டுகளின் எண்ணிக்கை
= (10 + 25) = 35
N(S) = 35
10 பரிசுச்சீட்டுகளில் ஒரு சீட்டு எடுக்க உள்ள வாய்ப்புகள்
= N(E) = 10
மொத்த சீட்டுகளில் ஒரு சீட்டு எடுக்க அது பரிசு உள்ள சீட்டாக இருக்க நிகழ்தகவு
P(E) = N(E)/N(S)
= (10/35) = (2/7)